
கொழும்பு, பெப் 24: கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 6,000 மெற்றிக் டன் எரிவாயுவை விடுவிப்பதற்கு தேவையான டொலர் வழங்கப்படாவிட்டால், மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்று லிட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக லிட்ரோ நிறுவன மூத்த அதிகாரி கூறுகையில் “லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு எரிவாயுவுடனான கப்பல்கள் தற்போது இலங்கையின் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. துறைமுகத்தில் தேங்கியுள்ள
எரிவாயுவை விடுவிக்க சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை. ஆனால், புதன்கிழமை பிற்பகல் வரை இலங்கை மத்திய வங்கி டொலரை வழங்கவில்லை.
நேற்றைய நிலவரத்திற்கமைய நிறுவனத்திடம் 2000 மெற்றிக் டன் எரிவாயு மாத்திரமே உள்ளது.
இந்த நிலை நீடித்தால் நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றார் அவர்.