
கொழும்பு, பெப் 24: தொல்லியல் துறை, மகாவலி அதிகாரசபை ஆகியவை மூலம் வடகிழக்கில் காணி அபகரிப்பு நடைபெறுவதாக கூறி அதற்கு எதிப்புத் தெரிவித்து எதிராக கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் வட, கிழக்கு தமிழ் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு பேரணியில் மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் ‘தமிழரின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடி வருகிறார்கள்.