தலைநகரை பிடிக்க உக்கிர மோதல் ——————————————————————–
உக்ரைனுக்கு எதிராக போரை ஆரம்பி த்துள்ளதாக ரஷ்யா உத்தியோகபூர்வ மாக அறிவித்துள்ளது.இதனால்,விமா ன நிலையங்கள் மூடப்பட்டதுடன் உக் ரைன் இணையங்கள் மீது பாதுகாப்பு புக்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன. சமாதான அழைப்புக்கள் எதையும் ரஷ்யா பொருட்படுத்தவில்லையென உக்ரைன் ஜனாதிபதி கவலை தெரி வித்துள்ளார்.இதையடுத்து,ஜி 07 நாடுகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக விமானங்கள் சுட்டுவீழ்த் தப்படுவதை தடுப்பதற்கே விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.உக்ரைனின் இணையங்கள் “சைபர்” தாக்குதலுக்கு உள்ளாவதை தடுப்பத ற்கான பாதுகாப்பை அமெரிக்கா உத்தரவாதப்படுத்தியுள்ளது. உள்ளே நுழைந்துள்ள ரஷ்யப்படைகளை எதிர் த்து பதில் தாக்குதல் நடாத்தப்படாததால் தலைநகர் “கியு” வை நோக்கி ரஷ்யா நெருங்கலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.இந்நிலையில்,உக்ரைனில் போராடும் ரஷ்ய சார்பு கிளர்ச்சி க்குழு தங்களிடம் உதவி கோரியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சபையான கிரம்ளின் தெரிவித்துள்ளது.
