
எத்தனை தடுப்பூசி செலுத்தினாலும் பயனிலை என நாடளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தற்போது வௌ;வேறு வடிவங்களில் மாறி வருகிறது. கொரோனா, ஒமிக்ரோன் உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்கள் தற்போது அதிகரித்து வருகின்றது.
அதற்கு கொரோனா தடுப்பூசி ஒன்று, இரண்டு, மூன்று என டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் பலருக்கு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது, இறந்தும் உள்ளனர்.
இந்த டோஸ்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லையா. நான்காவது டோஸும் செலுத்தப்போக்கின்கிறீர்களாக?. இதனால் எந்த பயனும் இல்லை.
இதை நிரூபிக்க வழி செய்யுங்கள். ஆய்வில் ஈடுபடுங்கள். எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மட்டுமே இந்த தொற்றுகளில் இருந்து தப்ப முடியும். அதற்கு உள்நாட்டு, ஆயுர்வேத மருத்துவம் சிறந்தது.- என்றார்.