
கொரோனாத் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 33 பேர் இதுவரை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் இறப்பு வீதம் 0.2 என்ற எண்ணிக்கையாக குறைந்துள்ளது. இதுவரை 33 பேர் உயிரிழந்தனர்.
பூஸ்டர் செலுத்திக் கொண்டாலும் வேறு நோய்கள், நீண்டகால நோய்கள் அவர்களுக்கு காணப்பட்டுள்ளது. ஆகவே கொரோனா தொற்றால் அவர்கள் நேரடியாக இறக்கவில்லை.
இதுவரை பக்க விளைவுகள் யாருக்கும் ஏற்படவில்லை. இது தொடர்பில் நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் புதுப்புது வைரஸ் தொற்றுகள் ஏற்படலாம். அவற்றை உறுதியாக கூற முடியாது. – என்றார்.