
யுக்ரேனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா தொடங்கியது. யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி விவகாரத்தில் தற்போது வரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே அறியுங்கள்:
யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
“ரஷ்ய ராணுவத்தின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதல்” என்று ரஷ்யாவின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
கீஃப்வில் உள்ள பிபிசியின் செய்தியாளர் பால் ஆடம்ஸ், கீஃப்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் கேட்டதாகத் தெரிவித்தார்.
யுக்ரேன் ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்யா, ரஷ்யாவின் ஐ.நா தூதர், யுக்ரேன் மீது போர் அறிவித்ததை “தனது அதிபர்” உறுதிபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர், “புதின் யுக்ரேனில் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியுள்ளார்,” என்று ட்வீட் செய்துள்ளார்.
அமெர்க்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதாகவும் சர்வதேச கண்டனங்களைத் திரட்டுவதற்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
யுக்ரேனில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தது பற்றிய செய்திகளை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி விவகாரத்தில் உடனடி கள நிலவரத்தை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.