திருகோணமலை மாவட்டத்தில் நீர்வழங்கள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்த நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார திருகோணமலை சனீஸ்வரர் தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.
திருகோணமலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் பிரதம குரு ரவிச்சந்திர குருக்களது தலைமையில் இப்பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இடதுசாரி முன்னணியின் தலைவர் ஒருவர் இலங்கையில் அமையப்பெற்ற ஒரே ஒரு கோவிலான சனீஸ்வரர் தேவாலயத்தில் விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
குறித்த வழிபாடுகளில் நீர்வளங்கள் அமைச்சின் திருகோணமலை இணைப்புச் செயலாளர் பீ.குணசாந்தன் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் ஜீ.வீ.டி. திலகரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
