மட்டு. கரடியனாற்றில் சட்டவிரோதமாக மான் ஒன்றை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்!

<!–

மட்டு. கரடியனாற்றில் சட்டவிரோதமாக மான் ஒன்றை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்! – Athavan News

மட்டு கரடியானாறு பொலிஸ் பிரிவிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில்  அனுமதியின்றி 5 வயது மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 9 ம் திகதி வரைவிழளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (புதன்கிழமை)  இரவு உத்தரவிட்டார்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு 6.45 மணியளவில் பங்குடா வெளி பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை கரடியனாறு பொலிசாருடன் வனவிலங்கு அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு மறைத்து வைத்திருந்த சுமார் 5 வயதுடைய மான் ஒன்றை மீட்டதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்து அவரை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 9 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மானை வனவிலங்கு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு  உத்தரவிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *