கொழும்பு கோட்டைஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் துறை மற்றும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் மூலம் காணி அபகரிப்புகள் நடைபெறுவதாகவும், அதனை உடனடியாக நிறுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் அழைப்பில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ சுமந்திரன், சாணக்கியன், ஸ்ரீதரன், , ஜனா- கருணாகரம் விநோகாதரலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதே கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.