இனத்தை காட்டிக் கொடுத்தவர்கள் வாயை மூடவும்! – எச்சரிக்கும் ஜனநாயக போராளிகள் அமைப்பு

தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது என ஜனநாயக போராளிகள் அமைப்பின் பொதுச் செயலர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக அன்று செயற்பட்ட பலர் இன்று கட்சிகளை ஆரம்பித்து, தமிழ் மக்களுக்கு தாமே காவலர்கள் என கூறி வருகின்றனர். இவர்கள் பிரபாகரனை பற்றி கதைப்பதற்கு தகுதி அற்றவர்கள்.

இவர்கள் பதவி ஆசைக்காக அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள். இனத்துக்காக போராடிய தலைவர் பிராபகரன், ஆயிரம் வருடங்களுக்கு தேவையான நல்லவற்றை செய்துள்ளார். ஆகவே அவரை பற்றி தரக்குறைவாக கதைக்க கூடாது.

இதனால் பாரிய விளைவுகளை பின்னர் அவர்கள் சந்திக்க நேரிடும். இது அரசியலுக்கு அப்பால். அது டக்ளஸ் தேவானந்தாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. வாய்களை சரியாக வைத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டிய காலம் வரும். எதிரியாக இருந்தாலும் தலைவரை மரியாதையாகத் தான் அழைத்து அழைப்பார்கள். இனத்தை காட்டிக்கொடுத்த நீங்கள் கதைக்க கூடாது.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *