
நாடாளுமன்றத்தின் இன்றைய வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரத்தின் போது இடைநடுவில் அமைதியின்மை ஏற்பட்டது.எதிர்க் கட்சி தலைவரின் கேள்விக்கான நேரத்தின்போது, எழுந்த சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன,“ பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதுதொடர்பில் சபை அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா? நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்பதால் இதனை முன்வைக்கிறேன். இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்வரும் நுழைவாயிலில் பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் கொண்டுவரப்பட்ட உபகரணம் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள கோரியபோது அவ்விடத்தில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், முரண்பாட்டு நிலையும் உருவாகியுள்ளது.அவ்வாறு குறித்த நாடாளுமன்ற உறுப்பினரால் எடுத்துவரப்பட்ட உபகரணம், பட்டடியலில் அனுமதிக்கப்படாத உபகரணமொன்றே இவ்வாறு எடுத்துவரப்பட்டுள்ளது. பட்டடியலில் குறிப்பிடப்படாத உபகரணமொ்னறை சபைக்குள் எடுத்துவருவதால் பாரிய சிக்கல் நிலை ஏற்படலாம். அவ்வாறு கொண்டுவரப்படும் உபகரணங்களின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்றாா். அதனை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.தொடர்ந்து சபையின் கேள்வி எழுப்பிய தினேஷ் குணவர்தன, குறித்த உபகரணம் முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட பிரச்சினை இல்லை. இந்த சபையின்ட பாதுகாப்பு நலன் கருதியே இந்த கேள்வியை முன்வைக்கிறேன். இது முழு நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாகும்.
ஆகவே, இதுதொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதுடன் நாடாளுமன்றத்துக்கும் இதுதொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்றாா்.இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,“ எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சபைக்கு தேவையில்லாத, அவசியமற்ற பொருட்களை எடுத்து வருவது தொடர்பில் அவதானிப்பதற்கான பொறுப்பை பொலிஸாரிடம் ஒப்படைக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்திலும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படும்” என்று அறிவித்தாா்.அதனை தொடர்ந்து பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ,“ எனது பையில் 03 டோர்ச்கள் இருந்ததாலேயே அந்த பிரச்சினை ஏற்பட்டது. மின் துண்டிக்கப்படுவதாலேயே நான் டோர்ச்சை எடுத்து வந்தேன். அதனை பயன்படுத்துவது தப்பில்லை. இடைநிடுவில் மின்துண்டிப்பு ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காகவே டோர்ச்சை எடுத்து வந்தேன்.” என்றாா்.
அதனை தொடர்ந்து சபையின் அமையின்மை ஏற்பட்டதால் சபை அமர்வு 10 நிமிடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.