
வடக்கில் மக்களின் காணிகள் பல்வேறு முறைகள் மூலம் அபகரிக்கப்படுகிறது. அதிலும் மகாவலி மற்றும் வன இலாகா திணைக்களம் மூலம் கணிசமான அளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தில் 44 வீத காணிகள் வன் இலாகா திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்கள் உள்ளது. இது போதாது என்று மேலும் பல காணிகளை அபகரிப்பதற்கு குறித்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் இன்று தெரிவித்தார்.
இதற்கு பதில் வழங்கிய வன இலாகா அமைச்சர்:
எந்த காரணத்தாகவும், மக்களின் காணிகள் அபகரிக்கப்பட மாட்டாது. மக்களின் நலனே எமக்கு முக்கியம். – என்றார்