
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில் 92 ரக பெற்றோல் பத்து நாட்களுக்கும், 95 ரக பெற்றோல் நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சுப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே போதுமானதாக உள்ளது.
மேலும் ஆறு நாட்களுக்குத் தேவையான டீசல் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எரிபொருள் தட்டுப்பாடு நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.