
கொழும்பு, பெப் 24: நாளை வெள்ளிக்கிழமை சில இடங்களில் 5 மணி 15 நிமிட மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்படி, ஏ, பி, சி பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும்.
மற்ற பகுதிகளில் 5 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும்.