
கொழும்பு, பெப் 24: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 329 நோயாளிகள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,912 ஆக உயர்ந்துள்ளது.
அராசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் தற்போது சுமார் 16,580 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை நாட்டில் 640,578 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 13,581 பேர் உயிரிழந்துள்ளனர்.