முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட நெல்லிமுறிப்பு குளத்தில் காட்டுயானை ஒன்று நடக்கமுடியாத நிலையில் விழுந்து உயிரிற்கு போராடிவருகின்றது.
குறித்த காட்டுயானை காலில் வெடிப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதி குளத்தில் யானை கடந்த 18ம் திகதி வீழ்ந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று குறித்த குளக்கரைப்பகுதியில் எழும்பி நடக்கமுடியாத நிலையில் யானை தண்ணீரில் வீழ்ந்து கிடந்துள்ளது.
இதேவேளை, யானைக்கான சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.


