
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகக் கிளிநொச்சி மாவட்டத்திலும் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக தமது வாழ்வாதார இழந்த நிலையிலுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மையால் தனியார் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்து முச்சக்கரவண்டியினை வாடகைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படி செலுத்தப்படும் ஆயில் முன்னைய விட அதிகமான வாடகை பணம் அறவிடவேண்டிய நிலைக்கு முச்சக்கரவண்டியின் சாரதிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே முற்சக்கரவண்டியில் தற்பொழுது மக்கள் முச்சக்கரவண்டியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முற்சக்கரவண்டி சாரதிகள் தமது வாழ்வாதாரத்தினை இழந்த நிலையிலுள்ளதுடன், இந்தநிலை தொடருமாயின் தமது முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலை விட்டு வேறு ஏதும் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிபொருளை மீண்டும் விரைவாகப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.