
பலர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர்.
இவ்வாறு உலக அளவில் சாதனைகள் செய்ப்பவர்களின் விபரங்கள் கின்னஸ் புத்தகத்தில் பதியப்படும்.
ஆனால் இவ்வாறு சாதனை செய்ப்பவர்கள் அதிமாக பயிற்சி செய்ய வேண்டும்.
அத்துடன் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு சாதனை செய்பவர்களுக்கு பணம் கிடைக்குமா இல்லையா ?
கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்றால்,முதலில் அவர்களின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேறு ஒருவர் செய்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் இந்திய ரூபாயில் 50 ஆயிரம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.
புதிய சாதனை செய்ய வேண்டும் என்றால் 75 ஆயிரம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு பணம் செலுத்தி சாதனை செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. புகழ் கிடைக்கும்.
அத்துடன் கின்னஸ் புத்தகத்தில் உங்கள் பெயர் பொறிக்கப்பட்டு,உங்களுக்கான சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.