
பளை – முல்லையடி பகுதியில் திடீரென வீதிக்கு வந்த கால்நடையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம், இன்று (24) இரவு 7.30 மணியளவில் பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் குடும்பஸ்தர் பயணித்துகொண்டிருந்த வேளையே இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதியில் திடீரென குறுக்கே பாய்ந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதையடுத்து, குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எம் பி.