கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலில் இருக்குமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.