கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக எஸ்.முரளீதரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்…!

கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபராக கடமையாற்றிய றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற நிலையில்  மேலதிக  அரச அதிபராக பணியாற்றி வந்த எஸ்.முரளீதரன் பதில் அரசாங்க அதிபராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் 03 நேற்று பிரதமர் தினேஷ் குணரத்தின அரச அதிபர் நியமனத்தினை வழங்கியிருந்தார். 

புதிய நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்க வருகை தந்த புதிய அரச அதிபரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், சிவில் அமைப்பினரும் இணைத்து பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் வரேவேற்பளிக்கப்பட்டது. 

தொடர்ந்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *