
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இன்று அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை செலுத்துவதற்காக அவரின் இந்தப் பயணம் அமையவிருந்தது.
இந்நிலையிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி வசதிகளுக்காக இந்தியாவுடன் பல உடன்படிக்கைகளில் ஈடுபட தாங்கள் தயாராக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.