
ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளில் 137 பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், 316பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவர் வெளியிட்ட காணொளி பதிவில், உயிரிழந்தவர்கள் ‘ஹீரோக்கள்’ என்று அழைத்தார்.
மேலும், ‘ரஷ்யா மக்களைக் கொன்று, அமைதியான நகரங்களை இராணுவ இலக்குகளாக மாற்றுகிறார்கள். இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்கப்படாது’ என மேலும் கூறினார்.
இதனிடையே குறித்த விமானம் பின்னர் 7ஏ கோஷிட்சியா வீதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது மோதி தீ விபத்துக்குள்ளானது. அந்த விமானம் ஆட்களை ஏற்றிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
உறுதிப்படுத்தப்படாத கூற்று, உக்ரேனிய தலைநகரில் முன்னதாக இரண்டு வெடிப்புகள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வருகிறது.