இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி யாழில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் இந்த கையெழுத்து சேகரிப்பு பணிகள், இன்று காலை மானிப்பாய் பொதுச் சந்தை முன்பாகவும், சங்கானை பேருந்து நிலையம் முன்பாகவும் இடம்பெற்று வருகிறது.


