14 வயது சிறுமியை கர்ப்பமாகிய 15 வயது மாணவன்

14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 15 வயது மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவிக்கு இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட இருவரும் ஒரே பாடசாலையில் 10ஆம் மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும், நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.

சந்தேகத்திற்குரிய மாணவனின் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன் மாணவனின் கல்வி நடவடிக்கைகளுக்காக 27,000 கொடுத்து கையடக்கத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளார்கள்.

அந்த தொலைபேசியில் இருந்து ஆபாச காணொளிகளை பார்வையிட்டதாகவும், குறித்த மாணவியிடம் அவ்வாறான முறையில் நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக தனது தாயிடம் கூறியுள்ளார். முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இருவருக்குமே தாங்கள் செய்த செயலின் தீவிரம் தெரியவில்லை என்பது விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயது மாணவன் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *