தமிழகம் திருச்சி முகாமில் கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் இன்று 3 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசா காலம் நிறைவடைந்தமை,க டவுச் சீட்டு இல்லாமல் உள் நுழைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கைது செய்து செய்யப்பட்ட இலங்கையர்கள், கடந்த மூன்று வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தம்மை விடுதலை செய்து, நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக ஆறு இலங்கையர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர சுமார் 50 இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
