
உக்ரைனின் மத்திய வங்கி, ரஷ்யா மற்றும் பெலாரஸில் உள்ள நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதையும், இரு நாடுகளின் நாணயங்கள் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளையும் தடை செய்துள்ளது.
வடகிழக்கு நகரமான சுமியில் உக்ரேனிய பாதுகாவலர்களுக்கும் ரஷ்ய தாக்குதல்காரர்களுக்கும் இடையே நடந்த வீதி துப்பாக்கிச் சண்டையின் காட்சிகளை உக்ரைனின் இராணுவம் வெளியிட்டுள்ளது.
சுமி – 260,000க்கும் அதிகமான மக்கள்தொகையுடன் ரஷ்ய எல்லையில் இருந்து 30 கிமீ (19 மைல்கள்)க்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ள ஒரு பிராந்திய தலைநகரம் ஆகும்.
உள்ளூர் நிர்வாகத்தின் தலைவரான டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி, ஒரு பெரிய ரஷ்ய இராணுவத் தொடரணி மேற்காக சுமியைக் கடந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்றதாகக் கூறினார்.
அருகிலுள்ள கொனோடோப் நகரம் இப்போது சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும், கூறினார்.