நாட்டில் சுமார் 200 தொடக்கம் 300 வரையான சிறிய பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளன.அவற்றின் உபகரணங்களும் விற்பனை செய்யப் பட்டுள்ளன என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் . கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் , தற்போது அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் அநாதரவான நிலையில் உள்ளனர் . பேக் கரித் தொழிலை இனிமேலும் கொண்டு நடத்த முடியாது . நாட்டிலுள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 4 ஆயிரம் பேக்கரிகள் வாரத்தில் 5 நாள் கள் மட்டுமே பாணை உற்பத்தி செய்கின்றன.
கோதுமைமாவின் விலை அதிகரிப்பு மற்றும் தட் டுப்பாடு , பாம் ஓயில் , தேங்காய் எண்ணெய் மற்றும் மாஜரின் விலை முன்பைவிட 100 வீதம் அதிகரித்துள்ளது .
இதனை பேக்கரி உரிமையாளர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை . இந்தப் பிரச்சினை களுக்குத் தீர்வுகளை வழங்கி , பேக்கரித் தொழி லைப் புத்துயிர் பெறச்செய்ய ஜனாதிபதி தலையிட வேண்டும் – என்றார்