யாழில் தொடரும் சிறைக்கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள், மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக மூன்றாவது நாளாக இன்றும் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவர் உண்ணாவிரத்தை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் நேற்று போராட்டத்தை கை விட்டார். அதன் பின்னர் சிறைச்சாலையில் இருவர் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்த நிலையில் சிறையில் உள்ளவர்களின் உறவுகள் யாழில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகம் முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *