
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘மானுடம் 2022’ என்னும் பெயரிலான சர்வதேச ஆய்வு மாநாடொன்றை எதிர்வரும் ஜூலை மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக மாநாட்டின் அமைப்புக்குழு அறிவித்துள்ளது.
‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு, தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’ என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரின் ஒருபகுதியாகக் கலைப்பீடம் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளது.