
கொழும்பு, பெப் 25: சிங்கப்பூரில் இருந்து 38,400 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வர உள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் உள்ள கப்பலை விடுவிப்பதற்காக 33 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.