
கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு பெருமளவான முச்சக்கரவண்டிகள் பயணிகளுக்கான சேவையை நிறுத்தியுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மையால் தனியார் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்து முச்சக்கரவண்டிகளை சேவையில் ஈடுபட கூடுதல் கட்டணத்தையும் பயணிகளிடம் அறவிட முடியாது.
கடந்த இரண்டு நாள்கள் தொழில் முடங்கியுள்ளதால், எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட முச்சக்கர வண்டிச் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்