
மட்டக்களப்பு, பெப்.25
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனைக்காக எடுத்துவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
iகைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.