
கொழும்பு, பெப் 25: உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்த போதிலும், உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படாது என்று எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் மேலும் இரண்டு கப்பல்கள் அடுத்த இரண்டு நாட்களில் நாட்டை வந்தடைய உள்ளன.
தற்போது 8 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது. வியாழக்கிழமை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தொடர்பாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் வெள்ளிக்கிழமை விசேட விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.