ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜேவிபியினால் உயிர் அச்சுறுத்தல் – சிஐடியில் முறைப்பாடு

 

தனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹட்சன் சமரசிங்கவை இலக்கு வைத்து வசந்த சமரசிங்க விடுத்த அச்சுறுத்தல் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஹட்சன் சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *