மன்னார், பெப்.25
மன்னாரில் அரிய வகையான 5 ஆமைகளை திருட்டுத் தனமாக ஓர் வீட்டில் மறைத்து வைத்திருந்த சமயம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆமைகள் தொடர்பில் மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த வழக்கை ஆராய்ந்த மன்னார் நீதவான் 5 ஆமைகளையும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்து அவர்களின் அறிக்கையுடன் 7் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்க கட்டளையிட்டார்.
நீதிமன்றின் கட்டளையின் பெயரில் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திளத்திடம் ஒப்படைக்கப்பட்ட 5 ஆமைகளையும் ஆராய்ந்த வன ஜீவராசிகள் திணைக்களம் இலங்கையில் பல வகையான ஆமைகள் காணப்பட்டாலும் இந்த வகையான ஆமைகள் மிகவும் அரிய வகையான கிறீன் ஒளிசீட்டர் வகை நல்லிண ஆமைகள் எனவும் இவை தொடர்ந்தும் நீண்டகாலம் வளரக்கூடியவை என நீதிமன்றிற்கு அறிக்கையிட்டனர்.

இதேநேரம் ஆமைகளின் ஆயுள் காலம் 100 ஆண்டுகளையும் கடந்தவையாக உள்ளபோதும. இந்த 5 ஆமைகளும் 30 வயதிற்கும் உட்பட்டவை என்பதோடு இந்த ஆமைகளின் தற்போதைய பெறுமதி 3 லட்சத்தை தொடும் என வன ஜீவராசிகள் திணைகள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றினை ஆராய்ந்த மன்னார் மாவட்ட நீதிபதி 5 ஆமைகளையும் பொலிஸாரின் முன்னிலையில் வன ஜீவராசிகள் திணைகள அதிகாரிகள் அவற்றினை கடலில் விடுமாறு உத்தரவிட்டதற்கு அமைய 5 ஆமைகளும் மன்னார் மாவட்ட கடலில் விடப்பட்டது.