களுத்துறை பிரதேச செயலக கட்டடத்தில் இன்று புதன்கிழமை (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறு மாடிகளை கொண்ட களுத்துறை பிரதேச செயலக கட்டடத்தின் தரை தளத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
கட்டடத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.