
உக்ரைன், பெப்.25
உக்ரைனில் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு சொந்தமான 2 நகரங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
ரஷ்ய படைகள் உக்ரைனில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதையடுத்து உக்ரைன் மக்கள் கிவ் பகுதியை
விட்டு வெளியேறி வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உக்ரைன் மீது பல மணி நேரமாக தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்க தொடங்கியதால்
உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.
நேட்டோ அமைப்பும் ரஷ்ய படைகளை உடனே பின்வாங்குமாறு வலியுறுத்தியது.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ரஷ்யா மேற்கொண்டுள்ள நடவடிக்கை என உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது.