இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைனியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம், கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் ஏந்திய பதாதைகளுடன் இலங்கை சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைனியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
