அருகிவரும் சைவபாரம்பரிய மரபுரிமை நூல்களின் சித்தார்த்த பதிப்புகளின் பறைசாற்றும் வாழ்வியல் கோலப்புத்தகங்களின் விற்பனைக்கண்காட்சி இன்று யாழில் இடம்பெறுள்ளது.
குறித்த நிகழ்வு இந்து சமய ,கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், யாழ் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டவத்தில் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் செ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பிரமாச்சரிய சுவாமிகள்,யாழ் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன், நல்லூர் பிரதேச செயலாளர் எழிழரசி அன்டன், ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இங்கு ஆறுமுகநாவலரின் அறிய நூல்களும் ,புன்லைக்கட்டுவன் கணேஸ் குருக்கள் வெளியீட்ட நூல்கள் ,சேர் பொன்னம்பலம் இராமநாதன் வெயீட்ட நூல்கள், தந்துர நூல்கள் ,சைவபெரியார் சிவபாதசுந்தரின் நூல்கள் கந்தபுராணநூல்கள், பெரியபுராண நூல்கள் ,திருவிளையாடல் காப்பியங்கள், யாழ் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் பல நூல்கள் தொகுப்பு நூல்கள் உள்ளடங்கலாக சும்மர் 1000 மேற்பட்ட நூல்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அருகிப்போகின்ற ஈழத்து சைவபாரம்பரிய நூல்களை மீளவும் அச்சீட்டு வெளியீடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அத்துடன் அருகிப்போகின்ற நூல்கள் யாராவது வீடுகளில் இருந்தால் அதனை ஒப்படைக்கு பட்சத்தில் மறுபதிப்பு செய்தால் அதனை மீண்டும் நூல்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டுள்ளது என இந்து கலாச்சாரத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்போது, சமயகுருமார்கள், ஆசிரியர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் சமய ஆர்வலர்கள், இந்து கலாச்சார திணைக்கள அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இவ் விற்பனைக்கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.





நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் – இன்று ஆரம்ப நிகழ்வு