
பாராளுமன்றத்தில் சட்டவிரோதமான முறையில் பொதியுடன் பிரவேசித்ததாக தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வன்மையாக மறுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் பாராளுமன்றத்துக்கு ஒரு பொதியைக் கொண்டு வந்ததாகக் கூறி செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சுற்றி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், வழக்கமாக பைக்குள் டோர்ச் லைட்டை எடுத்துச் செல்லும் போது ஏற்பட்ட சூழ்நிலை என்றும் அவர் தெரிவித்தார்.
டோர்ச் லைட் என்பது பொதுவாகக் கிடைக்கும் கருவி என்றும், அதில் அந்தராக்ஸைப் போன்ற இரசாயனக் கலவைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தாம் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்யவில்லை எனவும், ஸ்கேனரில் பையை வைத்ததாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.