கொழும்பு, பெப் 25: இலங்கையில் உள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், ‘போரை உடனே நிறுத்து’ போன்ற வாசகங்களை அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு ரஷ்ய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
