
யாழ்ப்பாணம், பெப்.25
யாழ்.மாநகரசபை, நல்லுார் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நல்லுார் பிரதேச செயலக எல்லைக்குள் முகக்கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவோருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் அநாவசியமாக நிற்போர், வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போர், சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு இந்த பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொலிஸாரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் இந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.