
கொழும்பு, பெப் 25: வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு இரவில் மின்வெட்டு அமல்படுத்தப்படாது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதன்படி சனிக்கிழமை ஏ, பி மற்றும் சி பகுதிகளுக்கு மாத்திரம் பகல் வேளையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.
இதேவேளை, ஏனைய பிரதேசங்களில் சனிக்கிழமை பகல் வேளையில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஏ, பி மற்றும் சி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது.
ஞாயிற்றுக்கிழமை (27) பகல் வேளையில் A, B, C ஆகிய பகுதிகளுக்கு 2 1/2 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.