
கடந்த மூன்று நாட்களாக யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களின் உறவுகளும் மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டதில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் கைதிகளின் உறவுகளை , வடக்கு மாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடி உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
அத்துடன், சிறை கைதிகளின் வழக்கை நடாத்தும் குறித்த நிறுவனம்,சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்கு தொடர்பான விபரங்களை ஆளுநருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் , நாளை ஆளுநரின் செயலர் மற்றும் உறவுகள் ,யாழ் சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டதில் ஈடுபட்டுள்ள கைதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகதவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த உறுதி மொழிகளை ஏற்று, அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பிலும் மேலதிக , நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உறவுகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.