
சீனா, பெப்.25
உக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஹுவா சுனிங் கூறியதாவது,
ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக அமெரிக்கா யுக்ரைனுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அணு ஆயுதங்களை வழங்கியுள்ளது.
இவற்றின் எடை 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாகும். யுத்தத்துக்கான அனைத்து அழைப்புகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் அதேவேளை, பதற்றத்தை குறைக்க சீனா முயற்சிகளை எடுக்கும்.
ரஷ்யாவுடன் சீனா நட்புறவைப் பேணுகின்ற போதிலும், அந்த நட்பு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்