
லங்கா IOC நிறுவனம் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இன்று (25) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதன்படி, அனைத்து ரக டீசலின் ஒரு லீற்றருக்கான விலையை 15 ரூபாவால் அதிகரிக்க IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.