
கொழும்பு, பெப் 26: வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலையை லங்கா IOC நிறுவனம் மீண்டும் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலாகும் வகையில், இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து ரக டீசலின் ஒரு லீற்றருக்கான விலையை 15 ரூபாவால், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 20 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லீட்டர் பெட்ரோலின் புதிய விலை 204 ரூபாவாகும்.
ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 139 ரூபாவாகும்.