
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி திருகோணமலையில் இன்று (26) சனிக்கிழமை கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.
திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை சில்வா சிலைக்கு முன்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, இன்று மாலை 3.30 மணியளவில் கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.