
நேற்று ( சனிக்கிழமை ) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி ( IOC ) தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால், ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனமும் கடந்த 6 ஆம் திகதி எரிபொருள் விலையை அதிகரித்ததுடன், இந்த மாதத்தில் இரண்டு தடவைகள் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 203 ஆகவும் , , ஒரு லீட்டர் டிசல் 139 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.